Posts

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

Image
இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் ஏராளம். மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் இயற்கையும், சுற்றுச்சூழலும் மிக வேகமாக மாசுபட்டு வருகின்றன. இதுவே, பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன. இதன் காரணமாகவே, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கூட, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கூட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பரப்புரைகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன.  இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வந்திருப்பதுதான் நான் ஓவன் எனப்படும் துணி போன்ற காகிதங்கள். இவை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே அழகாகவும், பல வண்ணங்களிலும் காட்சிகளிக்கின்றன. பயன்படுத்துவதற்கு காகிதம் போன்றும், துணி போன்றும் இலகுவாக உள்ளன. இவை, பார்ப்பதற்கு துணி போன்று இருந்தாலும், பருத்தியை பயன்படுத்தி நூல்களால் நெய்யப்படுவது இல்லை. பாலி புரொப்பலீன் என்ற வேதிப் பொருளால் இவை தயாரி...

தொழில் உலகம்: ஆண்லையன் விளம்ரம்

Image
தொழில் உலகம்:  தொழில் முனைவர், வாங்குபவர்கள், விறபனையாளர்கள்,  உற்பத்தியாளர்கள், சந்தைபடுத்துதல், யாரக இருந்தாலும் உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக  தொழில் உலகம் மாத இதழில்    தங்களுடைய விறம்பரங்களை பதிவட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 8489229878 என்ற வாட்சாப் எண்ணிற்கும்.   mr.kumarnagudi@gmail.com  என்ற இமெயிலுக்கும் தொடர்பு கொள்ளவும். மேலும் மாத இதழ் தேவைபடுவொர் உங்களுடைய  மெயில்  ஐடி  அனுப்பிவைக்கவும். 

6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்!

Image
கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியைப்பற்றி நாம் இன்றைக்கு வியந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் நாம் வியந்து பேசினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறு சிறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1954ல் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது. சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அப்போதைய நேரு அரசு, இந்த அமைப்பை தொடங்கியது. மத்திய குறு சிறு தொழில்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு, தொழில்முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவன பதிவு, வாங்குபவர் விற்பவர் கூட்டங்கள் ஒருங்கிணைப்பு, தொழில்துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயரிப்பில் உதவி, பொதுவான பயிற்சி வகுப்புகள் போன்ற பல நிலைகளில் தொழில் முனை வோர்களுக்கு உதவிகரமாக இருந்து...

பெண்களுக்கு கொட்டிகிடக்கிடக்கிறது... சுயதொழில் வாய்ப்புகள்

Image
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள். இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும். சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் ...

தரமிருந்தால்... விற்பனை பறக்கும்

Image
தயிர் சாதம் ஆனாலும் சரி தக்காளி சாதம் ஆனாலும் சரி தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று கூறுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இயல்பாக காண முடியும். ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்டதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லுபவர்களும் பலர் உள்ளனர். இந்த ஊறுகாயை தயாரிப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் தேன் துளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மகாலட்சுமி. பொருளாதார பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த இவர் தான் இருப்பது வாடகை வீடு என்பதால் தனியார் தொண்டு நல மையத்தின் உதவியுடன் தொழிலை மேற்கொண்டு வருகிறார். நகைப்பட்டறை வைத்திருந்தவர்கள் அந்த தொழில் நலிவடைந்தால் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவு இல்லாத இவர் வேலைக்கு சென்று குடும்பத்திற்கு உதவ இயலவில்லையே என்பது இவரது மன வருத்தம். கல்வியில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் சமையல் கலையில் வல்லவர். ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தயாரித்து சந்தை படுத்தியும் வருகிறார். இவரது வைவண்ணத்தில் எலும்மிச்சை, மாங்காய், நார்த்தங்காய், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான ஊறுகாய் மல்லி தொக்கு, ஜாதிக்காய் தொக்கு...

வருமானம் சக்கைபோடு போடுகிறது. காளான் வளர்ப்பு

Image
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக.. மருத்துவ பலன்களும், உணவு முறையும்: இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது. சிப்பிக்களானின் பருவம் மற்று...

இயற்கை நிறங்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம் சோப்!

Image
மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html இணையதளத்தைப் பார்க்கவும் அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றை பலர் விரும்புகிறார்கள். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என லேபிளில் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தத் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.  சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, க்ளிசரின் போன்றவை இயற்கை மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவையே. சோடியம்-பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. கேஸ்டிக் சோடா என்ற பெயரில் அழுக்குகளை சுத்திரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கும்போது கைகளில், கண்களில் படாதபடி கவசங்கள் அணிந்தே செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பலர் வீட்டிலேயேயும் தயாரிக்கி...