Posts

Showing posts from June, 2018

6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்!

Image
கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியைப்பற்றி நாம் இன்றைக்கு வியந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் நாம் வியந்து பேசினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறு சிறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1954ல் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது. சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அப்போதைய நேரு அரசு, இந்த அமைப்பை தொடங்கியது. மத்திய குறு சிறு தொழில்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு, தொழில்முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவன பதிவு, வாங்குபவர் விற்பவர் கூட்டங்கள் ஒருங்கிணைப்பு, தொழில்துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயரிப்பில் உதவி, பொதுவான பயிற்சி வகுப்புகள் போன்ற பல நிலைகளில் தொழில் முனை வோர்களுக்கு உதவிகரமாக இருந்து...

பெண்களுக்கு கொட்டிகிடக்கிடக்கிறது... சுயதொழில் வாய்ப்புகள்

Image
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள். இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும். சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் ...

தரமிருந்தால்... விற்பனை பறக்கும்

Image
தயிர் சாதம் ஆனாலும் சரி தக்காளி சாதம் ஆனாலும் சரி தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று கூறுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இயல்பாக காண முடியும். ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்டதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லுபவர்களும் பலர் உள்ளனர். இந்த ஊறுகாயை தயாரிப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் தேன் துளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மகாலட்சுமி. பொருளாதார பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த இவர் தான் இருப்பது வாடகை வீடு என்பதால் தனியார் தொண்டு நல மையத்தின் உதவியுடன் தொழிலை மேற்கொண்டு வருகிறார். நகைப்பட்டறை வைத்திருந்தவர்கள் அந்த தொழில் நலிவடைந்தால் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவு இல்லாத இவர் வேலைக்கு சென்று குடும்பத்திற்கு உதவ இயலவில்லையே என்பது இவரது மன வருத்தம். கல்வியில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் சமையல் கலையில் வல்லவர். ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தயாரித்து சந்தை படுத்தியும் வருகிறார். இவரது வைவண்ணத்தில் எலும்மிச்சை, மாங்காய், நார்த்தங்காய், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான ஊறுகாய் மல்லி தொக்கு, ஜாதிக்காய் தொக்கு...

வருமானம் சக்கைபோடு போடுகிறது. காளான் வளர்ப்பு

Image
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக.. மருத்துவ பலன்களும், உணவு முறையும்: இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது. சிப்பிக்களானின் பருவம் மற்று...

இயற்கை நிறங்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம் சோப்!

Image
மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html இணையதளத்தைப் பார்க்கவும் அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றை பலர் விரும்புகிறார்கள். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டவை என லேபிளில் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இந்தத் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.  சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, க்ளிசரின் போன்றவை இயற்கை மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவையே. சோடியம்-பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள சோப்புகள் தோலில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. கேஸ்டிக் சோடா என்ற பெயரில் அழுக்குகளை சுத்திரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கும்போது கைகளில், கண்களில் படாதபடி கவசங்கள் அணிந்தே செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பலர் வீட்டிலேயேயும் தயாரிக்கி...

சூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு

Image
சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் .நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர்.  வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும்.  தயாரிப்பது எப்படி? சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வ...

பெண்களுக்கு ஏற்ற லகபகரமான தொழில் லிப்ஸ்டிக் தயாரிக்கலாம்

Image
பெண்கள் அழகுசாதன பொருட்களில் குறிப்பிட்ட இடத்தை பிடிப்பது லிப்ஸ்டிக் என்றழைக்கப்படும் உதட்டுச்சாயம் ஆகும்.   இதில் முதலீடோ குறைவு லாபமோ  அதிகம். மேலை நாட்டு கவர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சியால் பெண்கள் தற்போது தங்களது அழகை மேம்படுத்திட பல்வேறு அழகு சாதன பொருட்களை  பயன்படுத்துகின்றனர். முகப்பொழிவை மேலும் அழகுபெற செய்திட பெருமளவில் பயன்படுவது உதட்டுச்சாயம் தயாரிப்பது எப்படி. தேவையான பொருட்கள்:  போரிக் ஆசிட் -250 கிராம் பெட்ரோலியம் ரெசின்-500 மில்லி வாஸ்லின்- 1000 மில்லி ஸ்டியாரிக் ஆசிட்-30 கிராம் ரோஸ் எசென்ஸ்-10 மில்லி கார்மன் ரோஸ் -10 மில்லி செய்முறை கனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். தேன் மெழுகு போட்டு உருக்கவும்¸ இதில் ஸ்டியரிக் ஆசிட் போட்டு ஒரு துடுப்பு மூலம் நன்கு கலந்து கொள்ளவும்¸ அடுத்து போரிக்   கலக்கவும்¸ பின்னர் அடுப்பின் நெருப்பை குறைத்து வாஸ்லின் கொட்டி நன்கு கலக்கவும்¸ அடுத்த கட்டமாக ரோஸ் எசென்சிஸ்  கலர் பவுடர் கொட்டி நன்கு கலக்கவும்¸ இறுதியாக பெட்ரோலியம் ரெசின் கொட்டி நன்கு கிளரி  இறக்கினால் லிப்ஸ்டிக் ரெடி.இதனை ...

நன்றாக சம்பாதிக்க தொழில்

Image
குடும்பச் சுமைகளை சுமக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலிருக்கும் பெண்கள் வீட்டிலிருந்தபடியேயாவது சம்பாதிப்பது என்று முடிவு செய்தாலும் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது தெரியாமல் தங்கள் விருப்பத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுகுறித்து சிறு முதலீட்டில் பல பெண் தொழிலதிபர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணனிடம் பேசினோம். அவர்,  பெண்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய தொழில்கள் ஏராளம் உள்ளன. அதில் சில தொழில்கள் பற்றி கூறினார். அதனை திறம்படச் செய்யும் பெண் தொழிலதிபர்களிடம் நாம் பேசினோம். இனி அவை இங்கே உங்களுக்காக... புடவை வியாபாரம்   நம் நாட்டிலும் ஏன் நம்மிடையேயும் பரவலாக இயங்கிவரும் ஒரு தொழில் புடவை வியாபாரம். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து பெண்களிடம் என ஆரம்பிக்கும் இந்த வியாபாரம் நாளடைவில் சூடுபிடித்து மற்றவர்களையும் அணுகக்கூடியது. அடுத்தக்கட்டமாக நம் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் புடவைகளை விநியோகம் செய்வதன் மூலமாக வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். முதலீடு ஐந்தாயிரம் ர...

பெண்களுக்கு ஏற்ற அசத்தலான தொழில்!

Image
பாசிட்டிவ் பாயின்ட்:  வீட்டிலிருந்தபடியே செய்ய நினைக்கும் பெண்களுக்கு இது பெஸ்ட். இதை ஒரு வேலையாகவும் செய்யலாம்:  அல்லது மற்றவர்களுக்கு வேலை கொடுத்து வாங்கித் தரும் பிஸினஸாகவும் செய்யலாம். தேவை:  10 அல்லது 12-ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும். டைப் ரைட்டிங் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். முதலீடு:  சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர். அதில், சி.டி. காப்பிரைட் செய்யும் வசதி, ஒரு தொலைபேசி, இன்டெர்நெட் இணைப்புடன். லாபம்:  சிம்பிள் ஃபைல், மீடியம் ஃபைல், காம்ப்ளக்ஸ் ஃபைல் என வேலைக்கேற்ற சம்பளம். பிஸினஸாகச் செய்யும் பட்சத்தில், அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி குறைந்த சம்பளத்தில் செய்து கொடுப்பதன் மூலம் வரும் வித்தியாசம். ஆலோசனை:  இத்தொழிலில் பல மாதிரியான நிறுவனங்கள் இருக்கின்றன. எது நல்ல நிறுவனம் என்பதை நம்முடைய அனுபவத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து நான்கைந்து நிறுவனங்களுக்கு வேலை செய்து தந்து, பணம் தருவதில் சரியாக நடந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு நாம் தொடர்ச்சியாக வேலை செய்து தரலாம் ...

தொழில் உலகம்; ஆரம்ப முதலீடு 550 ரூபாய்... ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்!

Image
* இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் * முட்டை மூலம் தனி வருமானம் * ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை பு யல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க... நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு  போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்...  குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனை! அப்பறம், புதுக்கொட்டை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக ...

பணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்

Image
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து ஜாமீன் கொடுக்க இயலாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.   இத்திட்டத்தின் படி தொழில்முனைவோருக்கு 10 சதவீதம் மூலதனம் இருந்தால் போதும். மீதம் 90 சதவீதம் கடனாக அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரை சொத்து ஜாமீன் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் மானியங்களை அளிப்பதற்கு ஒரு செயல் முகவராக செயல்படும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையிடம் இருந்து கடன் சார்ந்த மூலதன மானிய திட்டத்தின் கீழ்  பெற்று  அதை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. தொழில் முனைவோர் பயிற்சி திட்டம் மூலம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோர்க்கும், கிராமப்புறங்களில் வசிக்கும் தொழில்முனைவோர்க்கும், சமூக ஆதரவு குறைந்த தொழில் முனைவோர்க்கும் கடனுதவி வழங்குவதில் தமிழ்நாடு முதலீட்டு கழகமே முன்னணியில் ...

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

Image
உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய  http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html  இணையதளத்தைப் பார்க்கவும்.