தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகமானது தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, சிறந்த குறிக்கோள்களான சிறு அளவு தொழில்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தையும் மற்றும் மாநிலத்தில் பின் தங்கிய மற்றும் முன்னேற்றமில்லாத இடங்களில் தொழில்களை பரப்புதல் துரிதப்படுத்துவதைப் பற்றிய சிறப்பான குறிக்கோள்களை அட்டவணைப்படுத்தியுள்ளது. நோக்கம் சிறப்பான வளர்ச்சி மிக்க மையங்களை தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உருவாக்குதல். 1971ல் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் விரிவாக்கப்பட்டது. இன்றும் கூட இந்தக் கழகம் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு அரசாங்கம், முற்போக்கு சிந்தனையுடனும், தாராள / தயாள திறனும் கொண்டது. இந்த சிறு தொழில் முன்னேற்றக் கழகமானது அரசாங்கத்தின் வருமானம் செலவு, கடன் தொடர்புடைய மற்றும் மற்ற பல சலுகைகள் உள்ளடக்கிய சிறு அளவு தொழிலை முக்கியமாக சுய வேலைவாப்புக்களை ஊக்குவித்தலை நடைமுறைப்படுத்துகிறது. முக்கியக் குறிக்கோள் யாதெனில் சிறு அளவு தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்தல், மேம்படுத்தும் நடவடிக்கைகள் பின்வருமாறு. அடிப்படை வசதிகள் மற்றும் இட வசதிகளை உருவாக்குதல் ...