சுயதொழில் எப்படி தொடங்குவது?

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டுப்பிடிப்பிற்காக எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறது.
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை இங்கு தரப்பட்டதற்கான நோக்கம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவனது கண்டுப்பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)