சிறுதொழில் தையற்கலை













தையற்கலை

ஒரு தையல் மெஷின் வைத்து சரியான முறையில் தொழில் செய்தால் அதில் வரும் வருமானம் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும். இந்தத் தொழிலுக்குத் தேவை  தையல் அறிவு மற்றும் ஒரு தையல் மெஷின் அவ்வளவுதான். இவற்றோடு ஊசி, நூல், பொத்தான், கத்தரிக்கோல், அளவுநாடா போன்றவை... வீட்டில் ஒரு ஓரத்தில் தையல் மெஷினைப் போட்டு முதலில் தனக்கும், பின்னர் தனது உறவினர்களுக்கும் தைத்துக் கொடுக்க வேண்டும். அடுத்து அக்கம்பக்கம் என அனைவருக்கும் தைத்துக் கொடுத்து நல்ல வருமானம் பார்க்கக்கூடிய தொழில். ஆர்டரின்பேரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் துணிகளை வாங்கி வந்து தைத்துக் கொடுத்து சம்பாதிக்கலாம். தொழிலில் மேலும் முன்னேற இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றாற்போன்ற ஆடை வடிவமைத்தலுக்கு கொஞ்சம் கற்பனைத் திறனும் முக்கியம்.  

ஒரு ஜாக்கெட்டுக்கு ரூ.2 ஆயிரம்! திருமதி ஜெயச்சித்ரா, மதுரை. 

‘‘ சிறுவயதிலேயே தையல் தொழில் மீது ஆர்வம் இருந்து வந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் தையல் தொழில் செய்பவர்களிடம் போய் கேட்டு நானாக சிறுசிறு துணிகளைத் தைக்க முயற்சி செய்தேன். சிறு குழந்தைகளுக்கான உள்ளாடைகள், பாவாடை என ஆரம்பித்தேன்.  அப்புறம் எனது அம்மாவின் பழைய ஜாக்கெட்டை எடுத்துப் பிரித்து அதை மாடலாக வைத்து துணியை வெட்டி கையால் தையல் போட்டு பின்னர் மெஷினில் தைப்பேன். இன்று பலபேருக்கு தையல் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். 

தையல் கற்றவர்கள் கூட என்னிடம் வந்து துணி வெட்டுவதற்கு கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். பொதுவாக ஜாக்கெட்டில் 100 வகைகள் உள்ளன. ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் விரும்பும் டிசைனில் தைத்துக் கொடுக்க வேண்டும். ஜாக்கெட்டிலேயே பெயின்டிங் மற்றும் அலங்கார வேலைகள் என்ற ஆரி வொர்க் செய்தால் ஒரு ஜாக்கெட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரைகூட கிடைக்கும். சாதாரணமாக  ஒரு நாளைக்கு ரூ.400 முதல் 500 என சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். தேவை கொஞ்சம் கற்பனைத் திறன். திறமையை வளர்த்துக் கொண்டால் இந்தத் தொழிலில் அதிக வருமானம் பார்க்கலாம். ’’

Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)