சுய தொழில் வெற்றியும் நாட்டின் வளமும்



பள்ளி, கல்லூரி, பிறகு வேலை இப்படியாக ஒரு வாழ்க்கை சக்கரம் என்பதாக உள்ள இன்றைய சமுதாயத்தில் சுயவேலை என்பதில் முதலீடு செய்ய மறுக்கிறோம்.
வியாபாரம் செய்பவனுக்கு லாபமே இலக்கு. அதில் தோல்வி பெற்றுவிட்டால் சோர்வு வருவதும் இயற்கையே. ஆகவே வியாபாரம் வேண்டாம். கை நிறைய சம்பளம் மட்டுமே நிரந்தரம் என நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. குதிரை ஓட்டுபவன் திறமைசாலியாக இருந்தால் குதிரையை மட்டுமா
பார்த்துக் கொண்டு ஓட்டுவான்? சாலையைப் பற்றியும் கவலைப்படுவான் என்பதே. பள்ளம்-மேடு வரும் போது லாவகமாக ஓட்டினால் தானே குதிரையிலிருந்து குடை சாய்ந்து விடாமல் செல்ல முடியும்.
இன்றைய பொருளாதாரம் தளர்ந்துவிட்ட கடுமையான நேரத்தில் சுய முதலீடு செய்து தம் திறமையை நம்பி தொழில் புரியலாமா? கை நிறைய சம்பளம் வருகிறதே. அதை தேர்வு செய்து சீரான ஒரு வாழ்வு வாழலாமா?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவக்கிய பில்கேட்ஸ் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தால் எந்த அலுவலகத்திலும் வேலை கிடைத்திருக்காது. காரணம், அவர் கல்லூரி படிப்பை கூட முடிக்க முடியாமல் வெளியேறினார். கல்லூரி வளாகத்தில் படிக்க முடியாததை வாழ்க்கை பாடமாக அவருக்கு தந்தது இந்த சுயதொழில் வேட்கை.
அவர் வீட்டு ஒரு ஓரத்தில் இவரது இரு நண்பர்கள் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் தந்த யோசனைகள், ஆறுதல்களே ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் துவக்கம். கம்ப்யூட்டர்களை ரிப்பேர் செய்ய துவங்கியவர்கள்,
கம்ப்யூட்டரை ‘டெல்லி செட் ரேடியோக்’கள் போல் இவர்களே ‘அசம்பிள்’ செய்த கம்ப்யூட்டர் விலை குறைவாக இருப்பதுடன் வாங்கிச் செல்பவர்களுக்கு தேவையானவை மட்டும் இருப்பதால் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இதைத்தான் ‘Start Up’’ என்று நவயுக இளைஞர்கள் கூறுகிறார்கள். ‘துவக்கவாதிகள்’ என்று கூறலாம்!
கைநிறைய சம்பளம் சுயதொழில்  துவங்கவோ, வேலையில் சேரவோ வாய்ப்பு வந்தால் எதை தேர்வு செய்வது?
சுயதொழிலில்  நீங்களே முதலீட்டாளர். நீங்களே ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட  குழுவுடன் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனங்களில் உங்கள் திறமை கடலில்  கரைந்த உப்பாகவே இருக்கும், ஆனால் Start up நிறுவனங்களில் பணியாற்றினால்  உங்கள் முயற்சிகளும்  ஆலோசனைகளும் மிகவும் உயர்வாக மதிக்கப்படும். உங்கள்  செயல் திட்டம் தான் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  வீழ்ச்சிக்கும் காரணமாக  இருப்பதால், அப்படி ஒரு பணியில் படிப்பு முடித்தவுடன் இருப்பது உங்கள்  சட்டை காலரை தூக்கி விட்டபடி நடக்க வைக்கும்!
ஒரு வேளை தோல்வி என்றாலும் அந்தப்பணி தந்த அனுபவம் அடுத்த Start up துவங்கவோ பணியில் சேரவோ வழி வகுக்கும்.
சம்பளம் மிகக் குறைவாக இருக்குமே? நிச்சயம் குறைவாகவே இருப்பதால் வளர்ச்சி என்பது உறுதி.
பெரிய  நிறுவனங்களில் சம்பளம் அதிகம் என்ற நிலையில் ஆரம்பம் இருந்தாலும் சில  ஆண்டுகளுக்கு பிறகும் பெரிய சம்பள வளர்ச்சி இருக்காது. ரூ.20,000 என்பது  ரூ.30,000 ஆக உயரலாம். அது 50 சதவீத வளர்ச்சியாக இருக்கும்.
ஆனால்  சிறு நிறுவனம் துவக்கத்தில் ரூ.10,000 என்று மட்டுமே இருந்தாலும் அது உடனடி  வேலையாக இருக்கும். வேலை பறிபோய் விட்டால் அந்த ரூ.10000 த்தில்  வாழ்ந்தவருக்கும் அடுத்த வேலை கிடைக்கும் வரை ஓரளவு சமாளித்து விடலாம்.  ஆனால் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால், மேலும் பலரை புதிதாக வேலையில்  சேர்க்கும் போது, புதியவர்களை குறைந்தது ரூ.15,000 என சம்பளம் தர வேண்டிய  நிலையில் உங்கள் சம்பளம் ரூ.30,000 ஆக உயர்ந்து விடும், அது 200 சதவீத அதிகரிப்பாகும்!
அதே விகிதத்தில் அடுத்த உயர்வுகள் மற்றும் லாபங்கள் காண்பீர்கள். ஆகையால் வளர்ச்சிகள் மிக அபரீதமாக இருக்கும்.
பெரிய  நிறுவனங்களில் ஒரு பணியில் அமர்ந்தால் அடுத்த பல ஆண்டுகளுக்கு அதே  வேலையில் தொடர வேண்டும். ஆனால் சிறு நிறுவனங்களில் பல தரப்பட்ட வேலைகளில்,  பல சிக்கல்களை சமாளிக்க வேண்டிய நிலை இருப்பதால் வேலையில் திருப்தி, Job  Satisfaction உறுதியாக இருக்கும்.
மொத்தத்தில் மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியுடன் பல ஆண்டுகளுக்கு பணியாற்ற முடியும்.
ஆக  இப்படிப்பட்ட சிறு தொழில் முனைவோரின் முயற்சிகள் அதிகரித்து வருவதால்  இத்துறை புதிய கோணத்தில் பார்க்கப்பட்டு, மத்திய மாநில அரசுகளின்  ஆதரவுகளும் பெற்று வளர ஏதுவான சூழல் அமைய வேண்டும்.
சில மாதங்களுக்கு  முன்பு டார்ச் லைட்டை வெறும் கையை கொண்டு தேய்த்து விட்டால் போதும்,  பளிச்சென்று ஒளிரும். இந்த உபகரணத்தை வடிவமைத்தவருக்கு ‘கூகுள் தலைச்சிறந்த  விஞ்ஞானி’ பட்டம் தரப்பட்டது. அதை பெற்றவரோ 16 வயது சிறுமி ஆன்  மோகோசின்சி(Ann Mokosinshi) ஆவார்.
அது அவரது முதல் கண்டுபிடிப்பு கிடையாது. அதற்கு முன்பு ‘சூரிய ஒளி சான்ட்விச் (Solar Sandwich) தயாரிப்பும் வடிவமைத்தவர் ஆவார். அவற்றிற்கு காப்புரிமை அதாவது patent வாங்கவும் இருக்கிறார்.
கல்லூரி படிப்பு முடிந்தபின் வீடு வந்து சோர்ந்துவிடாமல், ‘செய்யும் தொழிலே தெய்வம் -அதில் திறமைதான் நமது செல்வம்’ என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . அவரின் சொற்றொடர் வாழ்வில் முன்னேற்றம் தரும் தாரக மந்திரமாக மாறும். இளைஞர்களின் வெற்றியே நாட்டின் வளர்ச்சியும் ஆகும்
.

Comments

Popular posts from this blog

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)