தொழில் உலகம்; ஆரம்ப முதலீடு 550 ரூபாய்... ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்!

*இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம்
*முட்டை மூலம் தனி வருமானம்
*ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை
புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க... நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்... குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.
மருத்துவர்களின் ஆலோசனை!
அப்பறம், புதுக்கொட்டை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக வர்றவங்களை இங்க அழைச்சிட்டு வந்து நேரடிப் பயிற்சியும் கொடுக்கிறாங்க.
இப்போ, என்கிட்ட விற்பனை செய்ததெல்லாம் போக, 80 கோழிகள், 8 சேவல்கள் இருக்கு. 100 குஞ்சுகள் வளர்ந்துட்டு இருக்கு. இன்னிக்கு (18.05.18) பிறந்த 90 குஞ்சுகள் இருக்கு. இது எல்லாமே ஆரம்பத்துல நான் வாங்கின கோழியில் இருந்து வந்தவைதான். சேவல்களை அடிக்கடி மாத்தணுங்கிறதால, ஆரம்பத்துல நான் வாங்கின சேவல் இப்போ இல்லை. ஆனா அந்த பெட்டைக் கோழியை மட்டும் இன்னமும் வெச்சிருக்கேன். சமீபத்துல பத்து சேவல்களை மட்டும் வாங்கியிருக்கேன். அதுல ஒரு கடக்நாத் சேவலும் இருக்கு.
கோழிகளை அடைக்கு வெச்சுதான் முட்டைகள்ல இருந்து குஞ்சு பொரிச்சுட்டு இருந்தேன். அடைக்கு வெக்கிறப்போ கோழிகள் திரும்ப பருவத்துக்கு வர தாமதமாகும். அதனால, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்குபேட்டர் வாங்கிட்டேன்” என்ற அய்யனார் பராமரிப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
மேய்ச்சல் முறை வளர்ப்பு!
“கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு இருக்கேன். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கலை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் இருக்கு. வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சிருக்கேன். அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரைத் தடுப்புலயே முட்டைகளை வெச்சுடும். காலையில தானாவே மேய்ச்சலுக்குப் போயிக்கும். மேயவிட்டு வளர்க்கிறப்பதான் அதோட இயல்பான வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அதனால கறியும் சுவையா இருக்குது. அதனாலதான், பண்ணைக்கே தேடி வந்து கோழிகளை வாங்கறாங்க.

தீவனத்துக்குச் செலவில்லை!
மேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெச்சிடுவேன். காலையிலயும் சாயங்காலமும் மட்டும் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுப்பேன். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலவாகுது. காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போட்டுவேன். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கும். அதனால எனக்கு தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடுது.

தினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்திடுவேன். முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெச்சுடுவேன். புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெப்பேன்.
முட்டையிட்ட கோழிகள் அடைக்குப் படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சுடுவேன். அந்தக் கோழிகள்கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.
மருத்துவம் அவசியம்!
குஞ்சுகளுக்கு, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி கொடுத்து புரூடர் ரூம்ல விடுவேன். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். பிறந்த 3, 4, 5-ம் நாட்கள்ல ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்ல கலந்து கொடுப்பேன். 7-ம் நாளும், 21-ம் நாளும் வெள்ளைக்கழிசலுக்கான தடுப்பு மருந்து கொடுத்துடுவேன். 35-ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போட்டுடுவேன். 55-ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சுடுவேன். 65-ம் நாள் திரும்பவும் வெள்ளைக்கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுத்துடுவேன். மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போட்டுடுவேன். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கிற ‘குஞ்சுகளுக்கான அடர்தீவன’த்தை வாங்கி கொடுப்பேன். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கிடுவேன்”

என்றார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேட்டனுர் பெ.அய்யனார்.
கோழி;
கோழி முட்டை
தேவைபடுவோர் 6380880498; 9655304086 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html
இணையதளத்தைப் பார்க்கவும்

Comments
Post a Comment